garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> எ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                    
1. அறம் பெருக்கும் வேள்வித் தீ
(பாடல் எண் – 397)

வெள்ளியும் இருவிசும்பு ஏர் தரும்; புள்ளும்
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற் றினவே;
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே பாடெழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, (5)
இரவுப் புறங் கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! பல கோள்
செய்தார் மார்ப! எழுமதி துயில்! எனத்
தெண் கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, (10)
நெடுங்கடைத் தோன்றி யேனே; அதுநயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன் என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு,
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்,
பாம்புஉரித்து அன்ன வான்பூங் கலிங்கமொடு, (15)
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங்கலம் நல்கி யோனே; என்றும்,
செறுவிற் பூத்த சேய் இதழ்த் தாமரை,
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த (20)
தீயொடு விளங்கும் நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம் பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக் கண் செலினும்,
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்,
என்னென்று அஞ்சலம் யாமே; வென் வேல் (25)
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல்; அவன்
திருந்து கழல் நோன்தாள் தண் நிழ லேமே!

திணை - பாடாண்
துறை – பரிசில் விடை; கடை நிலை விடையும்ஆம்.

இயற்றியவர் - புலவர் எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
அரசர் - குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com