garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ஐ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. தவம் செய்க!
(பாடல் எண் – 363)

இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே, சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம் (5)
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந் தனரே!
அதனால், நீயும் கேண் மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை; மாயமோ அன்றே!
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு (10)
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழிபிறப்பி னோன் ஈயப் பெற்று,
நிலன் கலனாக இலங்குபலி மிசையும் (15)
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே!

திணை - பொதுவியல்
துறை – பெருங்காஞ்சி

இயற்றியவர் - புலவர் ஐயாதிச் சிறுவெண் தேரையார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

2. தமிழைப் போற்றும் தலைவன்
(பாடல் எண் – 51)

நீர் மிகின் சிறையும் இல்லை, தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை,
வளிமிகின் வலியும் இல்லை, ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி!
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன், போர் எதிர்ந்து (5)
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே!
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே!
நுண்பல் சிதலை அரிது முயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல, (10)
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

திணை - வாகை
துறை – அரச வாகை

இயற்றியவர் - புலவர் ஐயூர் முடவனார்
அரசர் - பாண்டியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com