garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ஒ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. புல்லாயின ஆம்பல்
(பாடல் எண் – 248)

அளியதாமே சிறுவெள் ளாம்பல்,
இளையம் ஆகத் தழை ஆயினவே! இனியே
பெருவளக் கொழுநன் மாந்தெனப் பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல் ஆ யினவே! (5)

திணை - பொதுவியல்
துறை – தாபத நிலை

இயற்றியவர் - புலவர் ஒக்கூர் மாசாத்தனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

2. போர்க்களத்தை நோக்கிச் செல்லுமாறு ஏவினள்
(பாடல் எண் – 279)

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெரு நல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்(5)
பெரு நிரை விலக்கி, ஆண்டுப் பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி,
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி.
ஒரு மகன் அல்லது இல்லோள், (10)
“செருமுக நோக்கிச் செல்க” என விடுமே!

திணை - வாகை
துறை – மூதின் முல்லை

இயற்றியவர் - புலவர் ஒக்கூர் மாசாத்தியார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com