garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
37. பழிப்பில்லாத புகழ் பெறுக!
(பாடல் எண் – 168)

அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு,
கடுங்கண் கேழல் உழுத பூழி,
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர் (5)
உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்து விளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
வான் கேழ இரும்புடை கழா அது ஏற்றிச், (10)
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்
நரை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, (15)
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கைவள் ஈகைக் கடுமான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்தா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர், நாளும் (20)
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்தநின் வசைஇல் வான் புகழே!

திணை - பாடாண் திணை
துறை – பரிசில் துறை

இயற்றியவர் - - புலவர் கருவூர்க் கந்தப் பிள்ளைச் சாத்தனார்
அரசர் - பிட்டங் கொற்றன்

38. உடலை வருத்தும் செயல்
(பாடல் எண் – 219)

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முமூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே,
பலரால் அத்தை நின் குறிஇருந்தோரே!

திணை - பொதுவியல்
துறை – கையறுநிலை

இயற்றியவர் - புலவர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்
அரசர் - கோப்பெருஞ்சோழன்

39. ஆலங் கானத்து அமர் கடந்தவன்!
(பாடல் எண் – 23)

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனை இக்
களிறு படிந்து உண்டெனக் கலங்கிய துறையும்,
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர், (5)
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காரும், நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வரி நைப்பக் (10)
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி,
நண்ணார் நாண நாள்தொறும் தலைச் சென்று
இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்
துன்னல் போக்கிய துணிவி னோன் என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை (15)
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தமீஇய தெறி நடை மடப்பினை
பூளை நெடிய வெருவரு பறந்தலை (20)
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே!

திணை - வாகை
துறை – அரச வாகை

இயற்றியவர் - புலவர் கல்லாடனார்
அரசர் - தலையாலங் கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com