garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
43. வேலி ஆயிரமாக விளைக!
(பாடல் எண் – 391)

தண் துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய்ப் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தாமூரி பரந்து படக் கெண்டி (5)
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின், (10)
முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என,
நின்னுணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் (15)
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு,
இன்துயில் பெறுகதில் நீயே! வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய, (20)
வேலி ஆயிரம் விளைக நின் வயலே!
தண் துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய்ப் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தாமூரி பரந்து படக் கெண்டி (5)
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின், (10)
முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என,
நின்னுணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் (15)
ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்,
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு,
இன்துயில் பெறுகதில் நீயே! வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய, (20)
வேலி ஆயிரம் விளைக நின் வயலே!

திணை - பாடாண்
துறை – கடை நிலை

இயற்றியவர் - புலவர் கல்லாடனார்
அரசர் - பொறை யாற்றுக் கிழான்

45. பகல் எவ்வாறு கழியும்
(பாடல் எண் – 65)

மண்முழா மறப்பப், பண்யாழ் மறப்ப,
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்பச்,
சுரும்பு ஆர் தேறல் சுற்றும் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, (5)
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி மறத்தகை மன்னன், (10)
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே!

திணை - பொதுவியல்
துறை – கையறு நிலை

இயற்றியவர் - புலவர் கழாஅத் தலையார்
அரசர் - சேரமான் பெருஞ் சேரலாதன்

44. வானோர்க்கு விருந்தினர்
(பாடல் எண் – 62)

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப் (5)
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந் தனரே குடைதுளங் கினவே!
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந் தனவே!
பல் நூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் (10)
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக்
களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர,
உடன் வீழ்ந் தன்றால் அமரே! பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந் தனரே! (15)
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும், ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய,
விருந்துபெற் றனரால்; பொலிக நும் புகழே!

திணை - தும்பை
துறை – தொகை நிலை

இயற்றியவர் - புலவர் கழாஅத் தலையார்
அரசர் - சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com