garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
4. கதிரவனும் நினக்கு ஒக்குமோ!
(பாடல் எண் – 8)

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
கடந்துஅடு தானைச் சேர லாதனை (5)
யாங்கணம் ஒத்தியோ! வீங்குசெலல் மண்டிலம்
பொழுது என வரைதி, புறங்கொடுத்து இறத்தி;
மாறிவருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால், பல்கதிர் விரித்தே! (10)

திணை - பாடாண்
துறை – இயன்மொழி, பூவை நிலையும் ஆம்.

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - சேரமான் கடுங்கோ வாழியான்

6. நீரினும் இனிய பண்பினன்
(பாடல் எண் – 105)

சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி!
தடவு வாக் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டு படு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக; (5)
மால்புஉடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே!

திணை - பாடாண்
துறை – விறலியாற்றுப் படை

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - புலவர் வேள் பாரி

5. வன்மையுடையது நின் கை !
(பாடல் எண் – 14)

கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்புடைய எழு முருக்கிப்
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து சமந் தாங்கவும்
பார் உடைத்த குண்டு அகழி (5)
நீர் அழுவம் நிவப்புக் குறித்து.
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை; தேர்மிசைச்
சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! (10)
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி,
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின்; நன்றும் (15)
மெல்லிய பெரும! தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே!

திணை - பாடாண்
துறை – இயன்மொழி

இயற்றியவர் - புலவர் கபிலர்
அரசர் - சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com