garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
19. இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடு
(பாடல் எண் – 119)

கார்ப்பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து,
மென் தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ!
நிழல் இல் நீளிடைத் தனிமரம் போலப் (5)
பணைகெழு வேந்தரை இறந்தும்,
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

திணை - பொதுவியல்
துறை – கையறு நிலை

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - இது பொதுவாக பாடப் பட்ட பாடல்

21. கொடுப்பது நினக்கு எளிது
(பாடல் எண் – 121)

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே! பெரிதும்
ஈதல் எளிதே! மாவண் தோன்றல்!
அது நற்கு அறிந்தனை யாயின்,
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

திணை - பொதுவியல்
துறை – பொருள் மொழிக் காஞ்சி

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - மலையமான் திரு முடிக்காரி

20. போரில் வல்ல தலைவன்
(பாடல் எண் – 120)

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப் பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களைகால் கழாலின் தோடு ஒலிபு நந்தி (5)
மென்மயிற் புனிற்றுப் பெடைகடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக் (10)
கொழுங்கொடி விளர்க் காய் கோட்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடி தொறும் பகர்ந்து
நறு நெய்க் கடலை விசைப்பச் சோறு அட்டுப்
பெருந்தோள் தாலம் பூசல் மேவர (15)
வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ!
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடு கழைநரலும் சேட்சிமைப் புலவர்
பாடி யானாப் பண்பின் பகைவர்
ஓடு கழல் கம்பலை கண்ட (20)
செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

திணை - பொதுவியல்
துறை – கையறு நிலை

இயற்றியவர் - புலவர் கபிலர்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com