garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
25. ஈகை விளங்கும் பேகன்
(பாடல் எண் – 143)

மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்,
மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனத்தினை அயிலும் நாட! சினப் போர்க் (5)
கைவள் ஈகைக் கடு மான் பேக!
யார்கொல் அளியள் தானே; நெருநல்,
சுரன்உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இருஞ்சிலம்பின் சீறூர் ஆங்கண், (10)
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று,
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே!

திணை - பெருந்திணை
துறை – குறுங்கலி. தாபத நிலையும் ஆம்.

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - வையாவிக் கோப்பெரும் பேகன்

27. யான் கொடுக்கக் கொள்க!
(பாடல் எண் – 200)

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! (5)
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல்,
களங் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணிக் கொடும்பூண் விச்சிக் கோவே!
இவரே, “பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் (10)
கறங்கு மணி நெடுந்தேர் கொள்க” எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணங்கும் வாள்மேம் படுநன்;
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்(15)
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழ வோயே!

திணை - பாடாண்
துறை – பரிசில்

இயற்றியவர் - - புலவர் கபிலர்
அரசர் - விச்சிக்கோன்

26. நெடுந் தேர் ஏறி உடனே செல்க!
(பாடல் எண் – 145)

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடா அ நல்லிசைக்
கடா அ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரேம்! பாரமும் இலமே!
களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ் (5)
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம் செய் தீமோ அருள் வெய்யோய்! என,
இஃது யாம் இரந்த பரிசில்; அஃது இருளின்,
இனமணி நெடுந்தேர் ஏறி,
இன்னாது உறைவி அரும் படர் களைமே! (10)

திணை - பெருந்திணை
துறை – குறுங்கலி

இயற்றியவர் - புலவர் கபிலர்
அரசர் - வையாவிக் கோப்பெரும் பேகன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com