garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. பிறர்க்கென வாழும் பெருமை
(பாடல் எண் – 182)

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்;
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் (5)
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !

திணை - பொதுவியல்
துறை – பொருண்மொழிக் காஞ்சி

இயற்றியவர் - - புலவர் கடலுள் மாந்த இளம் பெருவழுதி
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

3. யாதும் ஊரே! யவரும் கேளிர்!
(பாடல் எண் – 192)

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், (5)
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் (10)
காட்சியின் தெளிந்தனம்; ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

திணை - பொதுவியல்
துறை – பொருண்மொழிக் காஞ்சி

இயற்றியவர் - - புலவர் கணியன் பூங்குன்றனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

2. சான்றோர் சான்றோரையே சார்பு கொள்வர்.
(பாடல் எண் – 218)

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் (5)
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே!

திணை - பொதுவியல்
துறை – கையறு நிலை

இயற்றியவர் - புலவர் கண்ணகனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com