garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> கு - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                            
1. பாடுவோர்க்கு அளித்த ஆய் அண்டிரன்
(பாடல் எண் – 240)

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடு ஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, (5)
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது: (10)
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப் பிறர்
நாடு படு செலவினர் ஆயினர், இனியே!

திணை - பொதுவியல்
துறை – கையறு நிலை

இயற்றியவர் - புலவர் குட்டுவன் கீரனார்
அரசர் - ஆய் அண்டிரன்

2. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
எண் – 18)

முழங்கு முந்நீர் முழுவதும் வளை இப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்,
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய (5)
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இனவாளை,
நுண் ஆரல், பருவரால்,
குரூஉக் கெடிற்ற குண்டு அகழி, (10)
வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த (15)
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன்
தகுதி கேள் இனி மிகுதி யாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; (20)
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே!
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் (25)
இறைவன் தாட்கு உதவாதே! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளா தோரே ! (30)

திணை - பொதுவியல்
துறை – முதுமொழிக் காஞ்சி

இயற்றியவர் - புலவர் குடபுலவியனார்
அரசர் - தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com