garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> கோ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. தெய்வ மருள் கொண்ட குறத்தி
(பாடல் எண் – 259)

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது,
இலைபுதை பெருங்காட்டுத் தலை கரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்;
செல்லல், செல்லல், சிறக்க நின் உள்ளம்;
முருகுமெய்ப்பட்ட புலைத்தி போலத் (5)
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்;
புடை இலங்கு ஒள்வாள் புனைகழ லோயே!

திணை - கரந்தை
துறை – செருமலைதல்

இயற்றியவர் - புலவர் கோடை பாடிய பெரும்பூதனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

2. அறவோன் மகனே!
(பாடல் எண் – 366)

விழுக் கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒரு தாம் ஆகிய பெருமை யோரும்
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந் தனரே! (5)
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
நின்று ஒன்று உரைப்பக் கேண்மதி!
நின் ஊற்றம் பிறர் அறியாது;
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, (10)
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும்
உழவு ஒழி பெரும் பகடு அழிதின்றாங்குச்
செங்கண் மகளிரொடு சிறு துனி அளை இ,
அங்கள் தேறல் ஆய்கலந்து உகுப்பக் (15)
கெடலருந் திருவ உண்மோ. . . . . .
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி,
நீர் நிலை பெருத்த வார்மணல் அடைகரைக் (20)
காவு தோறு இழைத்த வெறிஅயர் களத்தின்
இடங் கெடத் தொகுத்த விடையின்,
மடங்கல் உண்மை மாயமோ அன்றே!

குறிப்பு: இப்பாடலில் வரி 16 இல் சில தொடர்கள் கிடைக்கப் பெறவில்லை. சில வரிகள் மாறி உள்ளன.

திணை - காஞ்சி
துறை – பெருங்காஞ்சி

இயற்றியவர் - புலவர் கோதமனார்
அரசர் - தரும புத்திரன்.

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com