garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ச - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                          
1. ஒழுக்கம் குறையாது இருப்பாயாக!
(பாடல் எண் – 360)

பெரிது ஆராச் சிறுசினத்தர்.
சில சொல்லால் பல கேள் வியர்,
நுண்ணுணர்வினால் பெருங் கொடையர்,
கலுழ் நனையால் தண் தேறலர்,
கனி குய்யாற் கொழுந்துவையர், (5)
தாழ் உழந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள் இனி; நாளும்
பலரே தகை அஃது அறியா தோரே! (10)
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று அதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு மதி;அச்சுவரப்
பாறு இறை கொண்ட பறந்தலை, மாகத (15)
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
அழல்வாப் புக்க பின்னும், (20)
பலர் வாய்த்து இராஅர், பகுத்து உண்டோரே!

திணை - காஞ்சி
துறை – பெருங்காஞ்சி

இயற்றியவர் - புலவர் சங்கவருணர் என்னும் நாகரியர்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல் ஆகும்.

2. மற்போர் புரிந்த மன்னன்
எண் – 80)

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பு ஒதுங்கின்றே! ஒருகால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங் கின்றே!
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் (5)
பொரல் அரும் தித்தன் காண்கதில் அம்ம!
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகு மல்லன் கடந்து அடு நிலையே!

திணை - தும்பை
துறை – எருமை மறம்

இயற்றியவர் - புலவர் சாத்தந்தையார்
அரசர் - சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com