garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> த - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                          
1. வரும் விருந்தினர்க்கு உணவு இடுபவள்
(பாடல் எண் – 326)

ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக் குற்றுப் புலாவிட்டு அரற்றச்
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக் (5)
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே! மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,(10)
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன் செய் ஓடைப் பெரும் பரி சிலனே! (15)

திணை - வாகை
துறை – மூதின் முல்லை

இயற்றியவர் - புலவர் தங்கால் பொற்கொல்லன்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல் ஆகும்.

2. என்னினும் நீ நாணினையே!
(பாடல் எண் – 43)

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூர்உகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஓரீஇத் (5)
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க.
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார்கோல் (10)
கொடுமர மறவர் பெரும்! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்;
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்றிது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி, (15)
நின்யான் பிழைத்தது நோவாய்; என்னினும்
நீ பிழைத் தாய்போல் நனிநா ணினையே!
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக்
காண்தகு மொய்ம்ப! காட்டினை, ஆகலின், (20)
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்;
மிக்குவரும் இன் நீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!

திணை - வாகை
துறை – அரச வாகை

இயற்றியவர் - புலவர் தாமப் பல் கண்ணனார்
அரசர் - சோழன் நலங்கிளியின் தம்பி மாவளத்தான்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com