garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ந - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                          
1. நாட்டு மக்களை அன்புடன் காக்க!
(பாடல் எண் – 5)

எருமை அன்ன கருங்கல் இடைதோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை நீயோ, பெரும!
நீயோர் ஆகலின் , நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா (5)
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது காவல்,
குழவி கொள்பவரின் ஓம்பு மதி!
அளிதோ தானே, அது பெறல் அருங் குரைத்தே!

திணை - பாடாண்
துறை – செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சி

இயற்றியவர் - புலவர் நரிவெரூஉத் தலையார்
அரசர் - சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை.

2. எல்லோரும் உவக்கும் இனிய நெறி
(பாடல் எண் – 195)

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரைகவுள்,
பய ன்இல் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ! (5)
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்பு மின்; அது தான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

திணை - பொதுவியல்
துறை – பொருண் மொழிக் காஞ்சி

இயற்றியவர் - புலவர் நரிவெரூ உத்தலையார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com