garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ப - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. துன்பம் மிகுந்த உலக வாழ்க்கை
(பாடல் எண் – 194)

ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத் தோன் மன்ற, அப் பண்பி லாளன்! (5)
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்க! இதன் இயல்பு உணர்ந் தோரே!

திணை - பொதுவியல்
துறை – பெருங்காஞ்சி

இயற்றியவர் - புலவர் பக்குடுக்கை நன் கணியார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

3. அரசனை இழந்த நாடு
(பாடல் எண் – 63)

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே!
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்.
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே!
தேர்தர வந்த சான்றோர் எல்லாம், (5)
தோல்கண் மறைப்ப ஒருங்குமாந் தனரே!
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந் தனவே!
சாந்துஅமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்; இனியே, (10)
என்ஆ வதுகொல் தானே! கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே!

திணை - தும்பை
துறை – தொகை நிலை

இயற்றியவர் - புலவர் பரணர்
அரசர் - சோழன் வேற் பஃறடக்கை பெரு விறற்கிள்ளி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.

2. தாய் இல்லாக் குழந்தை போல்வர்
(பாடல் எண் – 4)

வாள், வலந்தர மறுப்பட்டன;
செவ்வா னத்து வனப்புப் போன்றன;
தாள், களங்கொளக் கழல் பறைந்தன;
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ;(5)
நிலைக்கு ஓரா அ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத் தான் இடம் காட்டக்
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச் சிவந்து உராஅய், (10)
நுதிம ழுங்கிய வெண்கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலம் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக்கடல் நிவந்து எழுதரும் (15)
செஞ்ஞா யிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே!

திணை - வஞ்சித் திணை
துறை – கொற்ற வள்ளை

இயற்றியவர் - புலவர் பரணர்
அரசர் - சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com