garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
19. பகைவரை அழிக்கும் பாண்டியன்
(பாடல் எண் – 52)

அணங்குடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து (5)
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே! ஊர்தொறும்
மீன்சூடு புகையின் புலவுநாறு நெடுங்கொடிv வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும், (10)
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாய் இடக் குழிந்த
வல்லின் நல்அகம் நிறைய, பல்பொறிக் (15)
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடுஉடை யோரே!

திணை - வாகை
துறை – அரச வாகை

இயற்றியவர் - புலவர் மருதனிள நாகனார்
அரசர் - பாண்டியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

20. பின்பு ஒரு நாள் வருமாறு மொழியான்
(பாடல் எண் – 138)

ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலையின் ஓழிய,
மீனினம் கலித்த துறைபல நீந்தி,
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண! (5)
நீயே, பேர் எண்ணலையே நின்இறை,
மாறி வாஎன மொழியலன் மாதோ!
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன்புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின் (10)
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

திணை - பாடாண்
துறை – பாணாற்றுப் படை

இயற்றியவர் - புலவர் மருதன் இளநாகனார்
அரசர் - நாஞ்சில் வள்ளுவன்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com