garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
25. நடுகல்லைப் பரவுக!
(பாடல் எண் – 335)

அடலருந் துப்பின் . . . .
குரவே தளவே குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறு கொடிக் கொள்ளே, பொறிகளர் அவரையொடு (5)
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக் (10)
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!
குறிப்பு: இப்பாடலில் முதல் அடியில் சில தொடர் கிடைக்கப் பெறவில்லை.

திணை - வாகை
துறை – மூதின் முல்லை

இயற்றியவர் - புலவர் மாங்குடி கிழார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

26. முத்துமலை தருக!
(பாடல் எண் – 372)

விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்தது எல்லாம் - முழுத்த
இவங்கு வாள் அவிர்ஒளிவலம் படமின்னிக்
கணைத் துளி பொழிந்த கண் கூடு பாசைறப்
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின், (5)
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் (10)
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே!

திணை - வாகை
துறை – மறக்கள வேள்வி

இயற்றியவர் - புலவர் மாங்குடி மருதனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com