garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
29. காதலை மூட்டிய மள்ளன்
(பாடல் எண் – 251)

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்;
கழைக் கண் நெடுவரை அருவி யாடிக்
கான யானை தந்த விறகின் (5)
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம் தாழ் புரிசடை புலர்த்து வோனே!

திணை - வாகை
துறை – தாபத வாகை

இயற்றியவர் - புலவர் மாற் பித்தியார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்.

30. காதல் மொழி பேசும் வேட்டுவன்
(பாடல் எண் – 252)

கறங்குவெள் ளருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடை யோடு
அள் இலைத் தாளி கொய்யு மோனே,
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே! (5

திணை - வாகை
துறை – தாபத வாகை

இயற்றியவர் - புலவர் மாற்பித்தியார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com