garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
37. கடுந்தேர் அவியன்
(பாடல் எண் – 383)

ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி,
நெடுங்கடை நின்று பகடு பல வாழ்த்தித்
தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து (5)
இடுக்கண் இரியல் போக ஊன் புலந்து
அருங்கடி வியன் நகர்க் குறுகல் வேண்டிக்
கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்,
தேம்பாய் உள்ள தம் கமழ்மடர் உளப்
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் (10)
கழைபடு சொலியின் இழை அணி வாரா
ஒண்பூங் கலிங்கம் உடீஇ நுண்பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
கற்புடை மடந்தை தன்புறம் புல்ல
மெல்லணைக் கிடந்தோன் . . . . . . . (15)
எற் பெயர்ந்த . . . . . . . நோக்கி . . . . . . . . .
. . . . . .. . . . . . அதற் கொண்டு
அழித்துப் பிறந்தனென் ஆகி அவ்வழிப்
பிறர் பாடு புகழ் பாடிப் படர்பறி யேனே!
குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி, (20)
நரைமுக ஊக மொடு உகளும் வரையமல் . . . .
. . . . . . . குன்று பல கெழீஇய
கான் கெழு நாடன் கடுந்தேர் அவியன் என,
ஒருவனை உடையேன் மன்னே,
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே! 25

குறிப்பு: இப்பாடலின் வரிகள் 15, 16, 17, 21, 22, இல் சில தொடர்கள் கிடைக்கப்பெறவில்லை.

திணை - பாடாண்
துறை – கடைநிலை

இயற்றியவர் – புலவர் மறோகத்து நப்பசலையார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

38. சோறளித்த சிறப்பு
(பாடல் எண் – 2)

மண் திணிந்த நிலனும்.,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு, (5)
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் (10)
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் (15)
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச் (20)
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே! (24)

திணை - பாடாண்
துறை – செவியறிவு றூஉ,

இயற்றியவர் - புலவர் முரஞ்சியூர் முடி நாகாரயர்
அரசர் - சேரமான் பெருஞ் சோற்று உதியன் சேரலாதன்

39. கவரி வீசிய காவலன்
(பாடல் எண் – 50)

மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஓண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச்சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம் (5)
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரை முகந்து அன்ன மென்பூஞ் சேக்கை,
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ் முழுது அறிதல்; (10)
அதனொடும் அமையாது அணுக வந்து, நின்
மதனுடை முழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசி யோயே! வியலிடம் கமழ
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை (15)
விளங்கக் கேட்ட மாறுகொல்!
வலம்படு குருசில்! நீ ஈங்கு இது செயலே!

திணை - பாடாண்
துறை – இயன் மொழி

இயற்றியவர் - புலவர் மோசி கீரனார்
அரசர் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை.

40. இரத்தல் அரிது! பாடுவது எளிது!
(பாடல் எண் – 154)

திரை பொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறிவுநர்க் காணின், வேட்கை நீக்கும்,
சின்னீர் வினவுவர் மாந்தர்; அதுபோல்,
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர்; அதனால் (5)
யானும் பெற்றது ஊதியம்; பேறு யாது என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளி வந் தனெனே;
ஈ என இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் (10)
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்பெருங் கானம் பாடல், எனக்கு எளிதே!

திணை - பாடாண்
துறை – பரிசில்

இயற்றியவர் - புலவர் மோசி கீரனார்
அரசர் - கொண்கானங் கிழான்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com