garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
7. செல்வத்தின் பயனே ஈதல்
(பாடல் எண் – 189)

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே! (5)
பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே!
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்!
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே!

திணை - பொதுவியல்
துறை – பொருண் மொழிக் காஞ்சி

இயற்றியவர் - புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

8. வாய் சிவந்து வருக!
(பாடல் எண் – 316)

கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்;
நெரு நை வந்த விருந்திற்கு மற்றுத் தன் (5)
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்று இக்
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு
ஈவது இலாளன் என்னாது, ஈயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்கச் (10)
சென்று வாய் சிவந்து மேல் வருக!
சிறுகண் யானை வேந்து விழுமுறவே!

திணை - வாகை
துறை – வல்லாண் முல்லை

இயற்றியவர் - புலவர் மதுரைக் கள்ளிற் கடையத்தன்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com