garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1. கொடை மேந் தோன்றல்
(பாடல் எண் – 388)

வெள்ளி தென்புலத்து உறைய, விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை,
இரும்பறைக் கிணைமகன் சென்றவன், பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக, அந்நிலை (5)
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்;
நுண்ணூல் தடக்கையின் நாமருப்பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளை நிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ! அவன், (10)
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைத் தொடா,
நாள்தொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி (15)
கண்மாறு இலியர் என் பெருங்கிளைப் புரவே!

திணை - பாடாண்
துறை – இயன் மொழி

இயற்றியவர் - புலவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
அரசர் - சிறுகுடிக்கிழான் பண்ணன்

2. நெடுந்தகை காக்கும் ஊர்
(பாடல் எண் – 329)

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று (5)
அரவு உறை புற்றத்து அற்றே; நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே!

திணை - வாகை
துறை – மூதின் முல்லை

இயற்றியவர் - புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
அரசர் - இது பொதுவாக பாடப்பட்ட பாடல்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com