garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> வ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
1.அசை நுகம் படாத ஆண் தகை
(பாடல் எண் – 179)

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப் போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், (5)
படை வேண் டுவழி வாள் உதவியும்,
வினை வேண் டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசை நுகம் படாஅ ஆண்தகை, உள்ளத்துக்
தோலா நல்லிசை நாலை கிழவன், (10)
பருந்து பசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே!

திணை - வாகை
துறை – வல்லாண் முல்லை

இயற்றியவர் - புலவர் வடநெடுந்தத்தனார்
அரசர் - நாலை கிழவன் நாகன்

2. விறலியர் பூ மாலை சூடுக!
(பாடல் எண் – 172)

ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!
கள்ளும் குறைபடல் ஓம்புக! ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக!
அன்னவை பலவும் செய்க! என்னதூஉம்
பரியல் வேண்டா வருபதம் நாடி, (5)
ஐவனம் காவல் பெய் தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்து மணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்;
ஆர்அமர் கடக்கும் வேலும், அவன் இறை
மாவள் ஈகைக் கோதையும், (10)
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!

திணை - பாடாண்
துறை – இயன்மொழி

இயற்றியவர் - புலவர் வடம வண்ணக்கன் தமோரனார்
அரசர் - பிட்டங்கொற்றான்

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com