garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு --> ஆசிரியர் பெயர் தெரியாதவை
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                                          
1. வளையலைக் காணாத விறலியர்
(பாடல் எண் –244)

பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா
விறலியர் முன் கையும் தொடியிற் பொலியா
இரவல் மாக்களும்... .....

(இரண்டு வரிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றன)

திணை - பொதுவியல்
துறை – கையறுநிலை

இயற்றியவர் - அறியப்படவில்லை
அரசர் - அறியப்படவில்லை

2. ஈமத்தாழியை அகலமாக வனைக!
(பாடல் எண் –256)

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி (5)
அகலிது ஆக வனைமோ!
நனந்தலை மூதூர்க் கலம்செய் சோவே!

திணை - பொதுவியல்
துறை – முதுபாலை

இயற்றியவர் - அறியப்படவில்லை
அரசர் - அறியப்படவில்லை

3. செருப்பிடைச் சிறுபரல் போன்றவன்
(பாடல் எண் –257)

செருப்பிடைச் சிறுபரல் அன்னன்; கணைக்கால்,
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்ச்
செவிஇறந்து தாழ்தரும் கவுளன்; வில்லொடு;
யார்கொலோ அளியன் தானே! தேரின் (5)
ஊர் பெரிது இகந் தன்றும் இலனே; அரண் எனக்
காடுகைக் கொண்டன்றும் இலனே; காலைப்
புல்லார் இன நிரை செல்புறம் நோக்கிக்
கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
சிலையின் மாற்றி யோனே! அவை தாம்,(10)
மிகப்பல ஆயினும், என்னாம்? எனைத்தும்
வெண் கோள் தோன்றாக் குழிசி யொடு,
நாள் உறை மத்தொலி கேளா தோனே!

திணை - பொதுவியல்
துறை – முதுபாலை

இயற்றியவர் - அறியப்படவில்லை
அரசர் - அறியப்படவில்லை

4. நடுகல்லைத் தொழுது செல்க!
(பாடல் எண் –263)

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி! வழாது
வண்டு மேம் படூஉம் இவ் வறநிலை ஆறே!
பல்லாத் திரள் நிரை பெயர்தரப் பெயர் தந்து, (5)
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே!

திணை - கரந்தை
துறை – கையறுநிலை

இயற்றியவர் - அறியப்படவில்லை
அரசர் - அறியப்படவில்லை

இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com