garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> புறநானூறு
புறநானூறு
puranaanooru, புறநானூறு பாடல்கள், சங்க கால வாழ்க்கை, பழைய ஓவியங்கள்

தமிழ்மொழிக்குத் தனிச்சிறப்பாக அமையப்பெற்றவை அக்கால நூல்கள். அவற்றுள் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் புறத்திணையைப் பற்றி அமைந்தவைப் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகும்.

புறநானூறு நூலானது நானூறு பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. அவற்றுள் இரண்டு பாடல்கள் (267 மற்றும் 268) கிடைக்கப்பெறவில்லை. நமக்கு புறநானூறு என்னும் அறிய நூல் கிடைக்கப்பெறாது இருந்தால் தமிழ் உலகம் மிகப்பெரிய வெற்றிடத்தை அடைந்திருக்கும். தமிழர்கள் வாழ்வு முறைகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பற்றிய எந்தச் தகவல்களையுமே அறியாமல் இருந்திருப்போம்.

புறநானூற்றில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். புறநானூற்றில் உள்ள ஏனைய பாடல்களை பாடியவர்கள் 153 புலவர்கள் ஆவர். பாடியவர் பெயர் இல்லாத பாடல்களும் உண்டு.

புலவர்கள் பற்றிய விவரங்களை ஆராய்ந்தோமானால் அவர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களாக அமைந்திருந்தனர். உதாரணமாக ஆசிரியர், அறவோர், அரசர், உழவர் எனப் பலதரப்பட்டவர்களும் ஆவர். இதன்மூலம் நாம் அறிவது யாதெனில் அந்நாளில் கல்வி அனைவர்க்கும் பொதுவானதாக இருந்தமை மிகத்தெளிவாக விளங்குகின்றது. இச்செய்தி மூலம் அக்கால கல்வி அனைத்து மக்களையும் சென்றடைந்த்தை அறியலாம்.

அக்கால வேந்தர்களைப் பற்றியும், அவர்களின் பண்புகள், ஆட்சிசெய்த பாங்கு மற்றும் மக்களில் இருந்து மாறுபட்டவர்களையும் அறிந்து அவர்களை ஒன்று படுத்திய பெருமை அக்கால சான்றோர்களையேச் சாரும் என்பதை புறநானூற்றின் வாயிலாக நாம் அறியலாம்.

மொழிஆய்வாளர்களுக்கு புறநானூறு ஒரு பெரும் புதையல் ஆகும்.

இங்கு நாம் புறநானூற்றில் உள்ள பாடல்களை புலவர்கள் வாயிலாக அகர வரிசைப்படி பாடல்களைத் தொகுத்துள்ளோம்.பாடல்களின் அடியில் அவற்றின் துறை மற்றும் அப்பாடல் எந்த அரசரைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளோம்.

கடவுள் வாழ்த்து

1. உமையை இடம் கொண்ட ஒருவன்
பாடியவர் : புலவர் பெருந்தேவனார்
பாடப் பெற்றவர் : சிவபெருமான்.

ingurunooru, old ilakkiyam drawing, garuda sanga tamil noolgal


கண்ணி கார்நறுங் கொன்றை: காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே! சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப!
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை, (5)
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று: அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை,
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே! (10)
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத் துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே!`

அ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ஆ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

இ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

உ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

எ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ஐ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ஒ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

க - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

கு - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

கோ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ச - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

த - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ந - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ப - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ம - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

வ - புலவர் வரிசையில் தொகுக்கப்பட்ட பாடல்கள்

ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள்

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com